kuhasini about enga veetu mappilai show details

அண்மையில் துவங்கப்பட்ட பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிளை'. இந்த நிகழ்ச்சியை பல மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்த காரணத்தால் மிகவும் அவசர அவசரமாக முடிக்கும் நிலையில் உள்ளனர் நிகழ்ச்சியாளர்கள். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து சரியான காரணங்கள் இல்லாமல் வெளியேற்றப்பட்டவர் குஹாசனி. இவர் நேற்று தனது பேஸ்புக் லைவ் வில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பற்றி ஒரு முக்கிய விஷயத்தை கூறினார். அதாவது " இப்போ என் கூட ஜனனினு ஒருத்தவங்க இருக்காங்க, இவங்களும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' ஷோவில் கலந்து கொண்டவர் தான் ஆனால் அவரை ஷோவில் அதிகமாக காட்டவே இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அபர்னாதி , சீதாலட்சுமி யை தான் அதிகமாக காட்டுவார்கள் , எல்லாம் டி ஆர் பிக்காக தான்,

இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக நிகழ்ச்சியைப் பற்றி பேசமுடியாது, அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நேரம் வரும் போது சொல்கிறேன் என்று அந்த லைவ்வில் குஹாசினி கூறினார். 

ஒரு சில விதிமுறைகள் இருப்பதால் தற்போது இந்த நிகழ்ச்சி குறித்த எந்த உண்மையையும் வெளிப்படுத்தாமல் இருந்து வரும் போட்டியாளர்கள், இந்த நிகழ்ச்சி முடிந்த பின் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என கூறப்படுகிறது.