சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள குபேரா திரைப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Kuberaa Box Office Collection : நடிகர் தனுஷின் 51வது படம் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் வில்லனாக நாகார்ஜுனா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குபேரா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி குபேரா படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் ரன்னிங் டைமையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி 181 நிமிடம் ஓடும் படமாக குபேரா இருக்கும் என அறிவித்துள்ளனர். அதாவது இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 1 நிமிடமாம். தனுஷின் கெரியரில் அதிக ரன்னிங் டைம் கொண்ட படமாக குபேரா அமைந்துள்ளது.

குபேரா முன்பதிவு வசூல் சரிவு

இந்நிலையில், குபேரா படத்தின் முன்பதிவு வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. இப்படம் இதுவரை டிக்கெட் முன்பதிவு மூலம் உலகளவில் ரூ.3.5 கோடி வசூலித்து உள்ளதாம். அதுவே தமிழ்நாட்டில் அதன் முன்பதிவு வசூல் இன்னும் ஒரு கோடியை கூட எட்டவில்லை. தற்போது வரை 65 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக சினிடிராக் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் மந்தமான வசூல் என்றே கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் குறைந்தபட்சம் 10 கோடியாவது வசூல் அள்ளிவிடுகின்றன. ஆனால் தனுஷின் குபேரா படம் அதில் பாதியை வசூலிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அப்படத்திற்கு பெரியளவில் ஹைப் இல்லாததே அதன் முன்பதிவு வசூல் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்தது. அந்த வசூல் சாதனையை குபேரா படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.