K.R.vijaya abour her maya mohini movie character

பழம் பெரும் நடிகை கே .ஆர். விஜயா பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ராசா விக்ரம் இயக்கி வரும் மாய மோகினி படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியபோது நடிக்க மறுத்த கே.ஆர்.விஜயா. இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் விலகியதும் அந்த படத்தில் இவருக்கு பிடித்து போனதால் இறுதியில் ஒத்து க்கொண்டார்.

இந்த திரைப்படத்தில் சக்கரையம்மா என்கிற பெண் சித்தர் வேடத்தில் நடித்து பற்றி கூறியுள்ள கே.ஆர்.விஜயா...

நான் சுவாமி மீது அதிக தெய்வ பக்தி கொண்டவள் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை, அந்த பகுதி மக்களுக்கே தெய்வமாக திகழும் பெண் சித்தர் சக்கரையம்மா பற்றி அறிந்ததும் அவருடைய கதாபாத்திரத்தை மறுக்க தனக்கு மனம் வரவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவரை போலவே வேடமணிந்து நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வந்த வாசி பகுதியில் உள்ள அதிசயம் குப்பம் பகுதியில் எடுக்கப்பதாக கூறப்படுகிறது, மேலும் இந்த ஊரில் உள்ள பண்டு ரங்கன் கோவிலுக்கு கே.ஆர்.விஜயா படப்பிடிப்பின் போது தன்னுடைய சொந்த செலவில் கொடிமரம் அமைத்து கொடுத்தார்.