ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலகினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற தமிழ் ரசிகர்களின் மனங்களில் மன்னனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருத்தனர். சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த் தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ம் அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்..!!” என குறிப்பிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி ஏராளமான திரையுலகினரையும் குஷியாக்கியுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலகினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Scroll to load tweet…

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கியவருமான கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், Wow....... Thalaivaaaaa வா தலைவா என மிகுந்த உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…
சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரும் இசையமைப்பாளருமான அனிருத் இனி தான் ஆரம்பம்... தலைவர் ஆட்டம் ஆரம்பம் என பாபா முத்திரையுடன் ட்வீட் செய்துள்ளார்.