புதுச்சேரி ஆளுநர், கிரண் பேடி மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்கள் அனைவரையும், 'திரௌபதி' பட சிறப்பு காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் புகைப்படம் வெளியிட்டு தெரிவிக்க,  திரௌபதி பட இயக்குனர் மோகன் தன்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'திரௌபதி ' கிரவுடு பண்டிங் மூலம் உருவான இந்த படத்தை, ஜி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், இயக்கி இருந்தார் இயக்குனர் மோகன்.

நாடக காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தை பார்த்த, எச்.ராஜா உள்ள அரசியல் தலைவர்கள், படத்தை வெகுவாக பாராட்டியது மட்டும் இன்றி, அப்பாவுடன் மகள் பார்க்க வேண்டிய தரமான படம் என கூறினர்.

இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி, தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அணைத்து பெண்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில், சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து அழைத்து சென்றுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும், 'திரௌபதி' பட இயக்குனர் மோகன், கிரண் பேடிக்கு ட்விட்டரில் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அந்த ட்விட் இதோ...