சமீபத்தில் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான படத்தின் டீசரும் தாறுமாறு வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. 

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ராக்கிங் ஸ்டார் யஷுக்கு இந்த படம் மாஸ் ஓபனிங்காக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான படத்தின் டீசரும் தாறுமாறு வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. படத்தை ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இயக்குநர் பிரசாந்த் நீல் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 6.32 மணிக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறிப்பிடப்பட்டிருந்தது. 

Scroll to load tweet…

தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி கே.ஜி.எஃப் சேப்டர் 2 திரைப்படம் ஜூலை 16ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக நிற்கும் ராக்கி பாயின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.