Asianet News TamilAsianet News Tamil

The Kerala Story Review: கேரளா ஸ்டோரி மதவெறியை தூண்டும் சர்ச்சை படமா? ட்விட்டர் விமர்சனம்!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்த்து ரசிகர்கள் எந்தமாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

kerala story movie twitter review
Author
First Published May 5, 2023, 11:09 AM IST

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம்  'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்றும், அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் இப்படத்தை, வெளியிட கூடாது... என சில அரசியல் கட்சிகள் மற்றும் பலர் தடை கோரினர். ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்று இப்படம் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சர்ச்சையாக பார்க்கப்பட்ட விஷயம்: தி கேரளா ஸ்டோரி  படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு கடத்தப்பட்டதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் கூறினர். எனவே இந்தப் படம் மதவெறியைத் தூண்டுவதாகக் கூறினர்.

kerala story movie twitter review

இதை தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஈராக் மற்றும் சிரியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் போராளிகளாக மாற்றப்படுவதற்கு முன்பு கேரளாவில் உள்ள இஸ்லாமியர்களால் லவ் ஜிஹாத் மூலம் ஈர்க்கப்பட்ட கேரளாவில், உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உண்மையான கதைகளை அடிப்படையாகக் கொண்டது இப்படம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலேயும் மே 5ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர், இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில்... இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில், கேரளா ஸ்டோரி என்ற ஹேஷ்டேக்க்கும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ட்விட்டர் விமர்சனம்:

கேரளா ஸ்டோரி குறித்து ஒருவர் போட்டுள்ள விமர்சனத்தில், #TheKeralaStory வெறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை பரப்புகிறது. இது ஆபத்தானது. நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் கோவம் வர வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ளது.

ஏ சான்றிதழுடன் கூட, சென்சார் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் இப்படத்தை வெளியிட எப்படி அனுமதித்தது என்பது எனக்குப் புரியவில்லை. இந்து பெண்களை இஸ்லாமிய மதமாற்றம் என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்பியுள்ளார்  இயக்குனர் #சுதிப்டோசென். கதையின் ஒரு பகுதி உண்மைதான், ஆனால் அது எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது முற்றிலும் விஷத்தன்மையுடன் சொல்லப்பட்டுள்ளது. 

#விபுல்அம்ருத்லால்ஷா இந்த #KerlaStoryயின் தயாரிப்பாளர் மட்டுமல்ல, இந்த திட்டத்திற்கான கிரியேட்டிவ் டைரக்டரும் கூட என்பது ஆச்சரியமளிக்கிறது. அவரது இந்த பதிப்பைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது.

சினிமாவின் வீழ்ச்சியால் ஏமாற்றம் அடைந்தேன். கேரளக் கதை உங்கள் நேரத்தையும் பணத்தையும் பெறத் தகுதியற்றது என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகரின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

கேரளா ஸ்டோரி படத்தின் கதை... எனக்கு உற்சாகமாகவும் பயமாகவும் இருக்கிறது! #GandhiVsGodse போன்ற சில படங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அதில் ட்ரைலரில் பார்ப்பதை விட, முற்றிலும் மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டின் "இடது" சித்தாந்தம் அனைவருக்கும் தெரியும் என்பது போல் தெரிய்வத்துள்ளார்.

 

 

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து முடித்துவிட்டேன்

அதா ஷர்மா, நீங்கள் திவாலாவதற்குள் நடிப்பை விட்டுவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு ரசிகர்... #TheKeralaStory என்பது கேரளாவின் ஒரு பகுதி மட்டுமல்ல, இது நமது சமூகத்தின் இருண்ட உண்மை! கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று தெரிவித்துள்ளார்.
 

இப்படி இந்த படம் தொடர்ந்து, கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கேரளா ஸ்டோரி இன்று வெளியாவதால், கேரளா ஸ்டோரி திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளதால்,  முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios