பிரபல பாலிவுட் பாடகி அனுராதா படுவாள் தான் தன்னுடைய உண்மையான தாய் என்றும், தற்போது இந்த உண்மை வளர்ப்பு தந்தை மூலம் தெரிய வந்ததாகவும் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி அனுராதா படுவாள், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் 300 மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர். பிலிம் பேர் விருது, தேசிய விருது, ஒடிசா ஸ்டேட் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 

தற்போது 65 வயதாகும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின் 'சதக் 2 ' என்கிற இந்தி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் மீது கேரளாவை சேர்த்த கர்மா என்கிற பெண், பரபரப்பு புகார் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுளதாவது. பிரபல பாடகியான அனுராதா படுவாள் தான் தன்னுடைய உண்மையான பெற்ற தாய் என்றும், தான் குழந்தையாக இருக்கும் போதே... அவர் தன்னை தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து தன்னுடைய வளர்ப்பு தந்தை மரண தருவாயில் தான் உண்மையை கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு 50 கோடி நஷ்டஈடு அவர் தரவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து, பாடகி அனுராதா படுவாளிடம் கேள்வி எழுப்பிய போது கோவத்தில் கொந்தளித்த அவர், இது மூன்ற கேள்விகளை தன்னிடம் எழுப்ப வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கூறி எரிச்சலோடு அங்கிருந்து சென்றார். அதே வேளையில் கர்மா தொடர்ந்து வழக்கு சம்மந்தமாக அனுராதா நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என நீதி மன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

ஏற்கனவே கடந்த ஓரிரு வருடத்திற்கு முன், நடிகை ஐஸ்வர்யா ராய் தான் தன்னுடைய அம்மா, என்று இளைஞர் ஒருவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதே போன்ற பிரச்சனை இப்போது இந்த பாடகிக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.