வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது வளர்ந்துவரும் கதாநாயகிகள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

தற்போது, சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம் படத்தில்" நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக விக்ரமுடன் சாமி 2 படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

மேலும் இவர் பழம்பெரும் நடிகை, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மூன்று மொழிகளில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் இவருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது 'மகாநதி' இவர் நடிக்கும் சாவித்திரி கெட் அப்பில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது 'மகாநதி' படத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடல் எடையை கூட்டி நடித்துள்ளார் என தெரிகிறது.