keethi suresh is wrong choice for savithiri character
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் நாக் அஷ்வின் என்பவர் இயக்கி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் தெலுங்கில் 'மாகநதி' என்றும் உருவாகும் இந்த படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால் தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க தகுதி இல்லாதவர் என சாவித்திரியுடன் பல படங்களில் நடித்த நடிகையும் தோழியுமான ஜமுனா கூறியுள்ளார்.
இது குறித்து பழம்பெரும் நடிகை ஜமுனா கூறுகையில்....
'நான் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது சாவித்திரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சாவித்திரியை பற்றி மற்றவர்களை விட தனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரை பற்றி என்னிடம் எதுவும் கேட்காமல் அவருடைய வாழ்க்கையைப் படம்மாக்குவது வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.
தகுதி இல்லாத கீர்த்தி:
இந்த படத்தில் சாவித்திரியாக நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சுத்தமாக தெலுங்கு மொழி தெரியாது. மொழி தெரியாத ஒருவர் எப்படி அந்த காதாப்பாத்திரதிற்கு உயிர் கொடுத்து நடிக்க முடியும்? இதனால் இந்த படத்தில் நடிக்க சுத்தமாக தகுதி இல்லாதவர் கீர்த்தி சுரேஷ் என்று ஜமுனா கூறியுள்ளார்.
சாவித்திரியை பற்றிய நினைவுகள்:
தற்போதைய நடிகைகள் அரை குறை ஆடையுடன் நடிக்கின்றனர் ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நானும் சாவித்திரியும் சேர்ந்து நடித்திரிக்கிறோம். எனக்கு மகன் பிறந்த போது தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு கூட சாவித்திரி வந்திருந்தார். அப்போது கணவர் அமைவது அவரவர் புண்ணியம். உனக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார் ஆனால் ஜெமினி கணேசன் என்னை மோசம் செய்துவிட்டார் என்று சொல்லி தன்னை கட்டிப்பிடித்து அழுதார்.
அதற்கு நான் நாங்கள் தடுத்தும் கேட்காமல் நீதானே விரும்பு அவரை மணந்தாய் என்று ஆறுதல் சொன்னேன் என்று இவர்களுடைய நட்பின் ஆழத்தையும் கூறினார் ஜமுனா.
