இதில், தமிழில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவர் நடிக்கும் படம் 'பெண்குயின்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய அனில் கிரிஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார். 


கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கிய 'பெண்குயின்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் திட்டமிட்டபடியே 53 நாட்களுக்குள் முழு படப்பிடிப்பையும் படக்குழு நடத்தி முடித்துள்ளதுதான். 

'பெண்குயின்' படக்குழுவினரின் இந்த அசுரவேக உழைப்பை பார்த்து வியந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ், அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நான் பணியாற்றிய படக்குழுவினர்களில் இந்த படத்தின் குழுவினர்கள் மிகவும் சிறந்தவர்கள் - இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே பல இனிமையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது - இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்"  என பாராட்டியுள்ளார். 

'பெண்குயின்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. விரைவில், படத்தின் டீசர், இசை மற்றும் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகளை படக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.