மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படம் படுதோல்வி அடைந்தது.

பின் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரெமோ, தொடரி, பைரவா, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'மகாநடி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்று, அனைவர் மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது, பாலிவுட் திரையுலகில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக, மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் படத்தில், நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரையுலகின் பக்கம்,  இவருடைய கவனம் திரும்பி உள்ளதால், தற்போது புதிய முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம்.

இதுநாள் வரை, தமிழில் கவர்ச்சி கட்டமாட்டேன் என அடம்பிடித்து வந்த கீர்த்தி, தற்போது பிடிவாதத்தை சற்று தளர்த்திவிட்டு, கவர்ச்சிக்கு ஓகே சொல்லும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகில் நிலைத்து நிற்கவே இந்த முடிவு என கூறப்படுகிறது. இவரின் இந்த முடிவு தான் ரசிகர்களை அதிச்சியடைய வைத்துள்ளது.