நடிகை கீர்த்தி சுரேஷ், 'மகாநடி' படத்திற்கு பின் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், "அண்ணாத்த" படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இதை தெடர்ந்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிக்கும் 'குயின்' படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, தெலுங்கில் இவரின் கை வசம் இரண்டு படங்கள் உள்ளது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக, பிரபல நடிகர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ரஷ்மிக்கா மந்தனாவை வைத்து, 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்க உள்ளார்.

காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.