நடிகை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'மிஸ் இந்தியா' படத்தின் டீசர் இன்று வெளியாகி, ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து, நயன்தாரா பாணியில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், முழுக்க முழுக்க கீர்த்தி சுரேஷை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'மிஸ் இந்தியா' இந்த படத்தை அறிமுக இயக்குனர்  நரேந்தர்நாத் என்பவர் இயக்கி வருகிறார். ஈஸ்ட் கோஸ்ட் ப்ரோடக்ஷான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

இந்த படத்தின் டீச்சரின் ஆரம்பத்தில், குடும்ப குத்துவிளக்காக காட்டப்படும் கீர்த்தி சுரேஷ், பின் மாடர்ன் பெண்ணாக காட்டப்படுகிறார். இந்த டீசரில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அழகு மெருகேறி வேற லெவலில் இருக்கிறார் கீர்த்தி என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 

இந்த படத்தை அடுத்து இந்தியில் உருவாகும் 'மைதான்' என்கிற படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.