கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரெமோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் வளர்த்து வரும் பல நாயகிகள் இவர் மீது பொறாமையில் உள்ளனர். காரணம் இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடிப்பதால் இவரை தேடி பல பெரிய பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது சூர்யா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தியை தேர்ந்து எடுத்துள்ளதாம் படக்குழு.
இதன் மூலம் விஜய் சூர்யா என டாப் நடிகர்களின் பிடித்த நாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
