நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து, கடந்த ஆண்டு வெளியான 'மகாநடி' திரைப்படம், தெலுங்கில்  தேசிய விருதை பெற்றுள்ளது. 

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது அந்த வகையில் 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ், நடித்த ஒரு சில படங்கள், தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்றிருந்தாலும், இவர் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த திரைப்படம் என்றால், அது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட 'மகாநடி' திரைப்படம் தான்.

இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இந்த படம் தெலுங்கில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது.

இந்த செய்தி, மகாநடி  படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றி, நடிகை சாவித்திரி எந்த அளவிற்கு திரையுலகில் முழுமையாக தன்னுடைய நடிப்பின் மீது அர்ப்பணிப்போடு நடித்தார் என்பதற்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சிறந்த நடிகைக்கான விருதும் 'மகாநடி' படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு படம் மட்டுமே மூன்று விருதுகளை பெற்று. கீர்த்திக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.மேலும் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதும் இந்த படத்திற்குகே வழங்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது