நடிகை கீர்த்தி சுரேஷ்:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாராக ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜயை வைத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் 62வது திரைப்படத்தில் கதாநாயகியாகவும், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக சாமி, விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி 2, உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சாவித்திரி வாழ்கை வரலாறு:

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்கை வரலாறு திரைப்படம் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தான் விளக்கு பூஜையுடன் முடிவடைந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் நாக் அஷ்வின் இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு வாழ்கை வரலாறு:

தற்போது மற்றொரு வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் இவர்  நடிக்க உள்ளாராம்.

 

கீர்த்தி சுரேஷ் ஒய்.எஸ்.ஆரின் மருமகளாக  இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

'யாத்ரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிக்க உள்ளதாகவும், மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.