நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து, வெளியாகியுள்ள புகைப்படைத்த பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வளர்ந்து வரும் நடிகைகள், திரையுலகில், பத்து, முதல் பதினைந்து வருடங்களாக திரையுலகில் கதாநாயகியாக நிலைத்து நிற்கும் நடிகைகள் அனைவரும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள, உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பட வாய்ப்பு கை நழுவிவிட கூடாது என்பதற்காக ஹன்ஷிகா, அனுஷ்கா, என பல நடிகைகள் விடா முயற்சியோடு எடையை குறைத்து மீண்டும் நடித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைத்துள்ளனர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கோலிவுட் திரையுலகில், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். முதல் படத்திலேயே பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரையுலகத்தில் நிலையான இடத்தை பிடிக்கும் ஆசை அம்மணியை விட்டு வைக்க வில்லை.

எனவே, தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் விளைவாக தற்போது, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அந்த புகைப்படம் இதோ: