keerthi suresh family reject director bala movie
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது திரையுலகில் அதிக பட வாய்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவரை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் 'மகாநதி' படக்குழுவினரை கௌரவிக்கும் விதத்தில், விழா ஒன்றை நடத்தி கீர்த்தி சுரேஷ்க்கு விருது ஒன்றையும் வழங்கினார்.

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷின் அம்மா தமிழ், மலையாளம், ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவருடைய அப்பா மலையாள சினிமா தயாரிப்பாளர். தற்போது கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் நடிக்க தொடங்கவிட்டார். விரைவில் இவரை கதாநாயகியாக வைத்து தான் படம் எடுப்பேன் என தெறி இயக்குனர் அட்லீ கூட ஒரு விழாவில் கூறியுள்ளார். 
இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன், துருவ் அறிமுகமாகும் 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவைக்க இயக்குனர் பாலா இவரை அணுகியுள்ளார்.
ஹீரோவின் பாட்டியாக அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை கீர்த்தியின் அம்மா வேண்டாம் என கூறிவிட்டார். தற்போது சரோஜாவுக்கு பதிலாக பழம்பெரும் நடிகை காஞ்சனா இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
காரணம் முக்கிய கேரக்டரான பாட்டி, இந்த படத்தின் இறுதியில் இறந்து விடுவது போல் காட்சியமைக்கப் பட்டிருக்கும். சமீபத்தில் தான் கீர்த்தியின் பாட்டி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்து அவதிப்பட்டாராம். அப்போது அவர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்த மேனகாவால் தாங்க முடியவில்லையாம். என் அம்மாவை மரண நிலையில் நினைத்து பார்க்க மனமில்லை இதனால் சரோஜாவுக்கு வந்த இந்த வாய்ப்பை, வேண்டவே... வேண்டாம்... என மேனகா தவிர்த்துவிட்டாராம்.
