வாரிசு நடிகையின் துணிச்சலான இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வந்தாலும், இதுபோன்ற விபரீத விளையாட்டை தவிர்க்குமாறு ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் (keerthi pandian) தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தும்பா' திரைப்படம் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியாள்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் 'கண்ணகி' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. 

இவ்வாறு கோலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி பாண்டியன் (keerthi pandian), சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் அவ்வப்போது கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள அவர், தற்போது நெருப்புடன் சாகசம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் பற்றி எரியும் நெருப்பு குச்சியை வாயில் வைத்துள்ள படியும், நெருப்பை உடம்பில் தேய்ப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீர்த்தி பாண்டியனின் துணிச்சலான இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வந்தாலும், இதுபோன்ற விபரீத விளையாட்டை தவிர்க்குமாறு சிலர் அட்வைஸ் செய்து வருகின்றனர். 

View post on Instagram