ரஜினிமுருகன், ரெமோ மூலம் சீக்கிரமாகவே முன்னனி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகி கீர்த்தி சுரேஷ் இவர் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடிருக்கிறார்.
மேலும் மலையாளம், தமிழ் சினிமா பிரபலங்கள், நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இவருக்கு தொலைபேசி , ட்விட்டர் மற்றும் பேஸ் புக் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மகிழ்ச்சியான கீர்த்திக்கு, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்ததால் மிகுந்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறாராம்.
தற்போது சூர்யாவுடன் தான சேர்ந்த கூட்டம் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் இரட்டிப்பு மகிழ்ச்சியால் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம் கீர்த்தி ட்விட் செய்துள்ளார்.
