kbalachandhar house forcolesed is true

இயக்குனர் பாலச்சந்தரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா, ஏலத்திற்கு வர உள்ளதாக நேற்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கோலிவுட் திரையுலகினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு கவிதையா நிறுவனத்தின் தரப்பில் இருந்து தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அதில் கூறியிருப்பது .

கவிதாலயா நிறுவனத்தின் கடன் பாக்கிக்காக மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளி வந்திருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

கவிதாலயா டி.வி.தொடர் தயாரிப்பிக்காக அரசுடமை வங்கி ஒன்றில் கடந்த 2010 ஆம் ஆண்டு குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சொத்துக்களை அடம்மானம் வைத்து கடன் வாங்கியது. 2015 யில் திரைப்படம் மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. 

மீதமுள்ள கடன் பாக்கியைச் செலுத்துவதற்கு வங்கியுடன் onetime settlement பேச்சு வார்த்தையை சட்டரீதியாக நடத்தி வருகிறது.

இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து சமூக ஊடகங்கள் வழியாக கே.பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலத்துக்கு வந்து விட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி விட்டனர். 

மேலும் எங்கள் மீது உண்மையான பாசமும் அன்பும் கொண்டு எங்களைத் தொடர்புக் கொண்ட நல்லிதயங்கள் இந்த தவறான செய்தியால் களங்கமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.