Kavya Madhavans involvement in Bhavana Case
நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன், அவருடைய கார் ஓட்டுனரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் இந்த சம்பவம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் அதிர்ச்சியாக்கியது.
இதை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனிலிடம் விசாரணை செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடைதியதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவருடைய இரண்டாவது மனைவி காவியா மாதவனுக்கு சொந்தமான கடையை இன்று போலீசார் சோதனை செய்ததாகவும் பின் ஒரு மணி நேரம் காவியா மாதவனிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பாவனா ஒரு காலத்தில் காவியா மாதவனின் நெருங்கிய தோழியாக இருந்தவர், இவரால் தான் திலீப் மற்றும் காவியாவின் நிஜ முகம் வெட்டவெளிச்சமானது. ஏற்கனவே பாவனாவால் காவிய பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என்பதால் பழி வாங்குவதற்காக இப்படி ஒரு செயலை செய்தாரா என்கிற நோக்கத்தில் போலீசார் விசாரித்ததாக தெரிகிறது.
இந்த வழக்கு குறித்து போலீசார் முழுமையான தகவலை வெளியிடும் போதுதான் உண்மையான தகவல் வெளியாகும் என்று மலையாள திரையுலகத்தில் கூறப்படுகிறது.
