மலையாள சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்த நடிகர் திலீப் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் விவாகரத்திற்கு பின் தன்னுடைய மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் திலீப்.

இவர்களின் விவாகரத்துக்கு காரணம் காவ்யா மாதவன் தான் என ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இவர்களது திருமணம் இன்று 9 மணி முதல் 10 மணியளவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.