பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியில் சென்ற கவினுக்கு, அஜித் ரசிகர்களும் - விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்து, சமூக வலைத்தளத்தையே பரபரப்பாக்கி உள்ளனர்.

பொதுவாக, ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே... அஜித் - விஜய் ஆகியோரின் இரு தரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக தங்களுடைய ஆதரவை தெரிவிப்பார்கள்.  இதே போல் தற்போது கவின் விஷயத்தில் ஒன்று சேர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், ஒரு சில தினங்களுக்கு முன், விஜய் டிவி தரப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது.

இதில், பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக... கவின் மற்றும் லாஸ்லியா என இருவரும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என அரங்கத்தையே அதகள படுத்தியுள்ளனர்.

மேலும் கவின் ரசிகர்களை கவரும் விதத்தில், தல - தளபதி என இவருடைய கெட்டப்பையும் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவ, தற்போது இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 60 படத்தின் பூஜை மற்றும் இதர தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகி உள்ளதால், இந்த சந்தோஷத்தில் ஒரு படி மேலே சென்று, அஜித் கெட்டப் போட்ட கவினையும் கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஏற்கனவே கவின் நடிப்பில் உருவாகி இதுவரை வெளியாகாமல் இருக்கும் 'நட்புன்னா என்னனு தெரியுமா' படம் ஒரு சில பிரச்சனைகளால் வெளியாகாமல் இருக்கும் நிலையில், தற்போது அந்த படத்தை வெளியிட மும்முரமாக முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.