பிரபலங்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று பொதுவெளியில் எதையாவது பேசி சர்ச்சைகளில் எதையோ புண்ணாக்கிக்கொள்ளும்  பிரபலமான கேரக்டர் யார் என்றால் அது எஸ்.வி சேகர் தான், அதிமுக டூ திமுக, திமுக டூ காங்கிரஸ், காங்கிரஸ் டூ பிஜேபி என அவர் அவர் மாறாத கட்சியே இல்லை, வாய்க்கொடுத்து புண்ணாக்கிக்கொள்ளாத இடமே இல்லை என சொல்லலாம்.

பல நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு கடந்த சில மாதங்களாக ஏதாவது சொல்லி மீண்டும்   ஃ பேமஸாக கோதாவில் குதித்துள்ளார். அரசியல்வாதிகளை குறிவைத்து விமர்சனம் செய்துவந்த இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரை கலாய்ப்பதாக நினைத்து ஆர்மியிடம் சிக்கி சீரழிந்து வருகிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவரின் செயல்பாடுகள் பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்; " நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டில் செரீனை பாராட்டுவது போன்று ஒரு டுவிட்டை பதிவிட்டுள்ளார். அதில், " ஒட்டு மொத்த விளையாட்டார்களில் இது விளயாட்டு, வாழ்க்கையுடன் இதை குழப்பிக்கொண்டு அசிங்கப்படாமல் மிகத்தெளிவாக இருப்பவர் ஷெரின் மட்டுமே  என்று தெரிவித்துள்ளார்.

எஸ்வி சேகரின் இந்த டீவீட்டை பார்த்த கவின், லாஸ்லியா ஆர்மியினர், ஏன் சார் உங்களுக்கு தமிழ்நாடு பிஜேபி தலைவர் பதவி யாரும் விட்டுக்கொடுக்கலனு காண்டுல பிக் பாஸ் பார்த்து கருத்து சொல்ல வந்துடீங்களா?

நேத்து நானே நெனச்சேன் கவீனுக்கு சப்போர்ட் பண்ண கூடாதுன்னு... ஆன நீ சொல்லிட்டல்ல அப்போ, இன்னிலேருந்து கவின்க்கு மட்டும் தான் என்னோட சப்போர்ட், சேரன்க்கு சொம்பு தூக்கிட்டு வந்துட்டீங்களா? அந்த சொம்பை தூக்கிட்டு கர்நாடகள இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து இருந்தா கூட உருப்படியா இருக்கும், இங்க தான் பொழுதுபோக்குகு பேசிட்டு இருக்காங்க, இந்த ஷோக்கு  ட்வீட் போடுற அளவுக்கு நீங்க வெட்டியா இருகிங்க போல!

பொழப்பு எதுவும் இல்லைனா இப்படி தான் பிக் பாஸ் பாத்துட்டு வெட்டியா பொழுதை கழிக்க வேண்டியது என இது போன்ற அச்சில் ஏத்தமுடியாத வார்த்தைகளாலும், காது கூசும் வார்த்தைகளால் சொற்ப்பொழிவாற்றி வருகின்றனர் கவின் லாஸ்லியா ஆர்மியினர்.