பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்ததில் இருந்து, லாஸ்லியா மற்றும் சாக்ஷியிடம் நெருக்கமாக பழகி வந்தவர் கவின். இவரின் செயல் சில ரசிகர்களையும் போட்டியாளர்களை கடுப்பேற்றினாலும், கவின் பற்றி தெரிந்த நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள், விளையாட்டிற்காக மட்டுமே கவின் அப்படி செய்து வருவதாக தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் கவினை அபிராமி காதலிப்பதாக கூறினாலும், இவரை தொடர்ந்து சாக்ஷி கவினின் காதல் வலையில் சிக்கியது போல் நடந்து கொண்டார். சில சமயங்களில் சாக்ஷியிடம் பொஸ்ஸசிவாக  கவின் நடந்து கொண்டது கவினுக்கும் சாக்ஷி மீது காதல் உள்ளதா என்கிற, சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் சாக்ஷியுடன் பழகிய இவர், லாஸ்லியாவுடனும் மிகவும் நெருக்கமாக பேசி பழகினார். இவரின் செயல், சாட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் மிக பெரிய பிரச்னையும் வெடித்தது. 

இதை தொடர்ந்து,  கவினுடன் மீண்டும் சாக்ஷி பழகி வந்த நிலையில், நேற்றைய முன் தினம், லாஸ்லியாவுடன், கவின் இரவு நேரத்தில் பேசிக்கொண்டிருந்ததை வைத்து சாக்ஷி , தன்னுடைய உணர்வுகளை இருவரும் புரிந்து கொள்ளவில்லை என புதிய சீன் ஒன்றை கிரியேட் செய்து அதனை இன்று பெரிய பிரச்சனையாக வெடிக்க செய்கிறார் என்பது இன்றைய ப்ரோமோ மூலம் தெரிய வந்தது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சாக்ஷி எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என, கவினிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். இதற்கு கை எடுத்து கும்பிட்டு போதும் மச்சான் நீ நல்லா இரு, என கூறுகிறார். பின் இனி நான் யாரையும் குறை சொல்ல போவதில்லை. 

இந்த வாரம் நான் சேப் ஆனால் கூட தயவு செய்து அடுத்த வாரம் என்னை நாமினேட் செய்து விடுங்கள். இந்த பிரச்னையை திரும்பவும் முடிவிற்கு கொண்டுவர நினைத்தாலும் மீண்டும் பிரச்சனை வரும். இரண்டு பேர் தன்னை வேறு மாதிரி பார்க்க துவங்கி விட்டனர் இனி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என கூறுகிறார். இவர் பேசி கொண்டே இருக்கும் போது, லாஸ்லியா எழுந்து செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.