Asianet News TamilAsianet News Tamil

ஓடிடி-யில் வெளியாகும் கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படம்..!! ரிலீஸ் தேதி இதோ..!!

பிக்பாஸ் கவின் (Kavin) ஹீரோவாக நடித்துள்ள லிப்ட் (Lift movie) ஓடிடி தளத்தில் வெளியாகும் என தேதியுடன் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

kavin acting lift movie released in hotstar ott officially announced
Author
Chennai, First Published Sep 23, 2021, 5:11 PM IST

பிக்பாஸ் கவின் ஏற்கனவே நடிகை ரம்யா நம்பீசனுடன் (ramya nambeesan), 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இரண்டாவதாக இவர் நடித்து வந்த திரைப்படம் 'லிப்ட்'.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் என அனைத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: முதுகு முழுசா தெரியுதே... வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் தெறிக்கவிடும் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி!!

கவினின் இரண்டாவது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில், கவினுக்கு ஜோடியாக 'பிகில்' படத்தில் நடித்த அமிர்தா ஐயர் (Amritha  Iyer) நடிக்கிறார். இப்படம் ஒரு ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. கொலை, ரத்தம், இன்வெஸ்டிகேஷன், என விறுவிறுப்பு மற்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.   

kavin acting lift movie released in hotstar ott officially announced

வினித் வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர், தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரோடக்ஷன், மற்றும் இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை பெற்றிருந்த  நிறுவனத்திற்கும் சில பிரச்சனைகள் எழுந்தது. மேலும் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் 'லிப்ட்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் தனி அழகு... ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா!!

 

kavin acting lift movie released in hotstar ott officially announced

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி 'லிப்ட்' திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கவின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

  

Follow Us:
Download App:
  • android
  • ios