kaveri water issue producer council release important statement

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 08.04.2018 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினால் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் தொழிலார்கள் விநியோகஸ்தர்கள், அனைவரும் இந்த கண்டன அற வழி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கூறி முக்கிய அறிக்கையை தென்னிதிய தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.