கத்ரீனா கைஃப் தன்னுடைய முன்னாள் காதலரான சல்மான் கானை விட்டு பிரிந்து விட்டாலும், அவருடன் எப்போதும் போல் திரைப்படங்கள் நடித்து வருகிறார். 

கத்ரீனா (Katrina) - விக்கி (Vicky Kaushal) ஜோடியின் திருமணம் டிசம்பர் 9 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் , உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களது பிரமாண்ட திருமணத்தில் 120 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், விருந்தினர்கள் யாரும் மொபைல் அல்லது கேமரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான பாலிவுட் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. இருந்தபோதும் அவர்கள் இருவரும் புதுமணத்தம்பதிக்கு திருமண பரிசாக பல கோடி மதிப்பிலான பொருட்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் ரன்பீர் கபூர், ரூ.2.7 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை பரிசாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நடிகர் சல்மான் கான், ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக கொடுத்துள்ளதாகவும், இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாம். பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

கத்ரீனா கைஃப் தன்னுடைய முன்னாள் காதலரான சல்மான் கானை விட்டு பிரிந்து விட்டாலும், அவருடன் எப்போதும் போல் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது டைகர் 3 படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை, விரைவில் அவர்கள் இருவரும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.