தீபாவளி ரிலீசை நண்பருக்காக விட்டு கொடுத்தாரா விஷால்.....???

இந்த வருட தீபாவளிக்கு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதில் நடிகர்சங்க நிர்வாகிகள் மற்றும் உயிர் நண்பர்களான கார்த்தியின் காஷ்மோரா மற்றும் விஷாலின் கத்திச்சண்டையும் அடங்கும்.

தற்போது கத்திச்சண்டை படத்தை நவம்பர் மதம் வெளியிட முடிவெடுத்துள்ளாராம் விஷால், காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தாத விஷால், தீபாளிக்கு கத்திச்சண்டை படத்தின் டீஸர் வெளியிட போவதாக அறிவித்துள்ளார் .

கார்த்தியின் பிரமாண்ட படமான கஷ்மோரா வெளிவருதால் நண்பனுக்காக விஷால் விட்டு கொடுத்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது.

உயிர் நண்பர்களான இருவரும் தீபாவளி ரிலீஸ்சில் மோதி கொள்வார்கள் என எதிர்பார்த்த்து ரசிகர்கள் பலருக்கு இது அதிர்ச்சியாக தன இருக்கிறது.

மேலும் சிலர் கொடி, கடவுள் இருக்க குமாரு போன்று வேறுவேறு காலங்களை கொண்ட படங்கள் ரிலீஸ் ஆவதால் விஷால் பின் வாங்கிவிட்டதாக கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக கத்திச்சண்டை வெளிவராது என்பது மட்டும் நன்றாக தெரிகிகிறது. ஏன் இந்த முடிவு என்று விஷால் தான் கூற வேண்டும்.