நடிகை கஸ்தூரி அவருடைய மகளுடன் இணைந்து, பாம்பு டான்ஸ் ஆடியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நடிகை கஸ்தூரி சம்பந்தமே  இல்லாமல் ஒரு சில அரசியல் கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர்.  ஆனால் ரசிகர்களிடம் இவருடைய கருத்துக்களுக்கு வரவேற்பும் எதிர்பார்ப்புகளும் அதிகம். 

இந்நிலையில் தற்போது தன்னுடைய மகளுடன் சிரித்துக்கொண்டே குழந்தை மாதிரி இவர் பாம்பு டான்ஸ் ஆடி அதனை வெளியிட்டுள்ளார். 

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியின் இறுதி பந்தில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு அதிர்ச்சி வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. வங்கதேச வீரர்கள் இதற்குமுன் ஆடிய பாம்பு டான்ஸை விமர்சிக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.