ஜம்மு காஷ்மீரில் பச்சிளம் குழந்தை ஆஷிபாவின் கொடூர மரணம் உலக அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இவரின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறனர். 

மேலும் பிரபலங்கள் பலர் இது குறித்து வீடியோ மற்றும் பேட்டிகளில் தங்களுடைய அதிருப்த்தியை தெரிவித்து, இந்த சம்பவர்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். 

நடிகை கஸ்தூரி:

இந்நிலையில் ஆஷிபாவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து துளியும் இறக்கம் இல்லாமல் அவரை சாகடித்த மிருகங்களை கொசுவை எப்படி எதுவும் சிந்திக்காமல் சாகடிக்கிரோமே அப்படியே இந்த நான்கு போரையும் சாகடிக்க வேண்டும் என்றும், இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து பலர் அலறும் அளவிற்கு இருக்க வேண்டும் என ஊடகத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும் சிறு குழந்தையை இப்படி செய்த இவர்கள் மனிதர்களே இல்லை என்றும், இவர்களால் உலக அளவில் இந்தியாவின் மானம் சந்தி சிரிப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஹாசினி என்கிற குழந்தையை பாலியல் துன்புருதளுக்கு ஆளாக்கி சாகடித்த தஷ்வந்தை எப்படி தமிழக போலீசார் கைது செய்து, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தனரோ அதே போல் இவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றும்... வேண்டும் என்றால் தமிழக போலீசாரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மற்ற மாநில போலீசார் என அதிரடியாக பேசியுள்ளார். 

தொடந்து பேசிய கஸ்தூரி 'நாங்கள் எல்லாம் சிறு பிள்ளையாக இருந்த போது தங்களுடைய பெற்றோர் கடைக்கு அனுப்புவார்கள், ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கே பயமாக உள்ளது என தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.