kasthuri support tharun vijay
நடிகை கஸ்தூரி சமீப நாட்களாக, நடிகைகள் சுதந்திரம் பற்றியும் நடிகைகளுக்கு நேரும் அநீதிகள் பற்றியும் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் என தருண் விஜய் சொன்னதால் வந்த சர்ச்சை பற்றி மனம் திறந்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகியில் தருண் விஜய் அப்படி சொல்லியிருந்தாலும் என்ன தப்பு.. நாம கருப்பு தானே. நாம என்ன வெள்ளைக்காரங்களா?“ என கேட்டுள்ளார் கஸ்தூரி.
வடஇந்தியாவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது பற்றி கேட்டபோது தருண் விஜய், "நாங்கள் நிறவெறி கொண்டவர்கள் அல்ல. கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடுதான் இவ்வளவு நாள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என சமீபத்தில் கூறினார். அதற்கு கடும் கண்டனம் எழவே உடனே அதற்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தருண் விஜய்க்கு ஆதரவாக, கஸ்துரி குரல் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
