kasthuri selfi create small problem

நடிகை கஸ்தூரி இந்தக் கட்சியில் இணையப் போகிறார்... அந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்றெல்லாம் ஆயிரம் கிசுகிசுக்கள் வந்தாலும் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துவிட்டு தனக்குப் பிடித்த பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். 

இவரைப் பற்றி சமீபத்தில் ஊடகங்களில் வதந்திகள் கிளம்பிய போது, அதற்கு தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர் சமீபத்தில் தஞ்சாவூரில் உள்ள நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

அங்கு வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய வலை தளத்தில் பகிர்ந்தார். அப்போது கோவில் பின் புறத்தில் ஒருவர் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழித்த போது, கஸ்தூரி ஒரு செல்பி எடுத்துள்ளார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அது சர்ச்சையாக உருவெடுத்தது. 

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிலர், கஸ்தூரியிடம் இதைத் தவிர்த்து விட்டு போஸ்ட் பண்ணி இருக்கலாம் எனக் கூறினர். ஒரு சிலர் தூய்மை இந்தியா எனக் கூறிக்கொண்டு அசுத்தம் செய்துகொண்டிருக்கின்றனர் எனக் கூறி தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் குறித்து கஸ்தூரி கூறுகையில், அவர் ஒரு ஐயப்ப சாமி... என்னிடம் வந்து பேசி என்னுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டார். ஆனால் அவர் பின்புறம் இருப்பது தெரியாமல் புகைப்படம் எடுத்தது நான் தான். ஆனால் பொது இடத்தில் அசுத்தம் செய்கிறாரே என்று சற்று கோபமாக ட்விட் செய்துள்ளார்.