நடிகர் தனுஷை தனது மகன் என்றும் தனுஷ் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளதும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா இன்று நடைபெற்ற 'பார்க்க தோணுதே' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

மதுரையில் ரூ.4000 சம்பளத்தில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது செல்வராகவனும், தனுஷூம் பிறந்ததனர். 

ஆனால் இன்று தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்று கூறி வருவதாகவும் அப்போது இருந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் இப்போது இல்லை என்றும் கூறினார்.

மேலும் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்தபோது தனுஷ் +1 படித்து கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமும் ஈடுபாடும் இல்லை என்றும் கூறினார். 

மேலும் ஆரம்ப காலத்தில் தனக்கு பல அவமானங்கள் ஏற்பட்டதாகவும், இந்த அவமானங்களை தாண்டித்தான் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

மேலும் 'பார்க்க தோணுதே' போன்ற சிறிய படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் அப்போதுதான் சினிமா நன்றாக இருக்கும். மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா' என்றும் கஸ்தூரி ராஜா பேசினார்.