பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்துள்ள புதிய போட்டியாளர் நடிகை கஸ்தூரி. இவர், எவ்வளவு தான் மற்ற போட்டியாளர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்தாலும், அவரால் அது முடியவில்லை. மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது, எப்படி அவரை ஒரு பிரச்சனையாக பார்த்தார்களா அதே போல் தான் கஸ்தூரியையும் பார்க்கின்றனர் மற்ற போட்டியாளர்கள்.

குறிப்பாக நேற்றைய தினம், கஸ்தூரி சேரன் மற்றும் மதுவிடம் கேரட் வெட்டுவது குறித்து பேசிக்கொண்டிருந்த போது கூட, சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, முகேன் என அனைவரும் ஒன்று கூடி கலாய்த்து கொண்டிருந்தனர்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ், கஸ்தூரி அனைத்து ஹவுஸ் மேட்சுக்கும் சமையல் குறிப்புகளை சொல்லி தர வேண்டும் என கடிதம் அனுப்புகிறார். இதை தொடர்ந்து கஸ்தூரியும் தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை ஹவுஸ் மேட்சுடன் பகிர்ந்து கொள்ள தயாரானார்.

முதலில் சமையல் செய்பவருக்கு 5 அரை பேட்டி அவசியம். அதில் சமயலுக்கு தேவையான தாளிப்பு சாமான்கள் இருக்கும் என கூறுகிறார். பின் தான், முதல் முதல் முதலில் சமைத்த உணவு எது என்றும்... அதற்கான சூழல் எப்படி உருவானது என்பதையும் கூறினார்.

அதாவது, இவருக்கும் அவருடைய அம்மாவிற்கும் சண்டை வரவே, கஸ்தூரியின் அம்மா இவரிடம் கோபித்து கொண்டு அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று விட்டாராம். எனவே கஸ்தூரி தன்னுடைய தோழிகளுடன் சில நாட்கள் கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். அது பிடிக்காமல் போக, மற்றொரு தோழியிடம் சீரகம் உருளைக்குழங்கு சப்ஜி எப்படி செய்வது என தெரிந்து கொண்டு செய்ததாக கூறியுள்ளார்.