கஷ்மோராவின் பட ப்ரோமோஷன் வேளைகளில் நாயகன் கார்த்தி மட்டும் பட குழுவினர் பிஸியாக உள்ளனர்.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர் படக்குழுவினர்.
ஏற்கனவே தமிழில் ப்ரோமோஷன் முடித்து விட்டதால், தற்போது ஹைராபாத்தில் ப்ரோமோஷான் நிகழ்ச்சியை நடத்தினர்.
அப்போது கார்த்தி படத்தின் பெருமைகள் பற்றியும், இதில் இடம் பெற்றுள்ள அனிமேஷன் காட்சி அமைப்பு பற்றியும் பத்திரிகையாளர்கள் முன் பேசினார்.
அப்போது எதிர் பாரத விதமாக அவரது மீசை மெல்ல மெல்ல கீழே விழ, அதை திருப்ப திருப்ப ஒட்டி கொண்டு பேசினார் கார்த்தி.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
