மிக குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். படித்தது இன்ஜினீயரிங் என்றாலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக... நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த உச்சகத்தால் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார்.

சினிமாவில் எந்த முன்னனுபவமும் இல்லாமல், இவர் இயக்கிய குறும்படங்கள் ரசிகர்களை மட்டும் அல்ல, நடுவராக இருந்த சுந்தர் சி-யிடமும் பாராட்டை பெற்று தந்தது.

பின் பல்வேறு போராட்டங்களை கடந்து, 'பீசா' படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்து வெளியான ஜிகிர்தண்டா திரைப்படத்தில் நடித்ததற்கு நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. 

தற்போது பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் மிகவும் கூல்லாக பதில் கொடுத்துள்ளது அந்த பதில் ரசிகர்களை சற்று அதிர்ச்சியாகவும் ஆக்கியுள்ளது. அதாவது ஒரு வேளை உங்களால் கடந்த வாழ்க்கைக்கு சென்று பழைய கார்த்தியை பார்க்க முடிந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிறிதுநேரம் யோசித்த அவர், வாடானு ஒரு பீர் வாங்கித் தருவேன் என்று கூல்லாக தெரிவித்துள்ளார்.