லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான "கைதி" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. கார்த்தி படங்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமை "கைதி" படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக மாறியுள்ளது. 

 

இதனையடுத்து நடிகர் சூர்யா, அவரது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து "தம்பி" படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான "பாபநாசம்" படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்குகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகாவும், அவர்களது அப்பா, அம்மாவாக சத்யராஜ், சீதா ஆகியோரும் நடிக்கின்றனர். 

 

முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

தமிழில் நடிகர் சூர்யா, மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகர்ஜுனா ஆகியோர் டீசரை வெளியிட்டனர். அதிரடி சண்டை காட்சிகளும், அக்கா- தம்பி பாச போராட்டமும் நிறைந்த "தம்பி" படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் "தம்பி" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் கார்த்தி சில செல்ஃபிக்களை எடுத்துள்ளார். "தம்பி" குடும்பம் மொத்தமும் இடம் மொத்தமும் புன்னகையுடன் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் புள்ளிங்கோ கொட்டப்பில் கார்த்தி,ஜோதிகாவிற்கு ஜீத்து ஜோசப் நடிப்பு சொல்லி கொடுப்பது போன்ற புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.