லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "கைதி" படத்தில் மகளுக்காக ரவுடிகளுடன் தர்ம யுத்தம் நடத்திய கார்த்தி, "தம்பி" படத்தில் அக்காவிற்காக எதையும் செய்யும் அசுரனாக அவதாரம் எடுத்திருக்கிறார். "பாபநாசம்" பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில், கார்த்தியின் அக்காவாக முதல் முறையாக ஜோதிகா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள "தம்பி" படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். குடும்ப சென்டிமென்ட் உடன் வெளியாகியுள்ள நல்ல படம் என பெரும்பாலான நெட்டிசன்கள் "தம்பி" படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

கார்த்தியின் காமெடி போர்ஷன் நன்றாக  உள்ளதாகவும், கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் காம்பினேஷன் நன்றாக வெர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் டுவிட்டரில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். 

ஜீத்து ஜோசப்பின் சிறந்த குடும்ப படமான "தம்பி", நகைச்சுவை மற்றும் திரில்லரில் கலக்கியிருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார் இந்த நெட்டிசன். 

எதிர்பாராத ட்விஸ்டுகள் உடன் படம் செம்ம ஸ்பீடாக செல்வதாகவும், ஜீத்து ஜோசப்பின் திரைக்கதை, அதற்கு ஏற்ற மாதிரி ஜோ, கார்த்தி, சத்யராஜ், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். 

எப்படிப்பட்ட கதையையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து காலி செய்யும் வலிமை இப்போது உள்ள சோசியல் மீடியா தலைமுறையிடம் உள்ளது. இந்நிலையில் தம்பி படத்திற்கு ஆரம்பமே அமர்களம் என்பது போல, நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர்.