​'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். 'கைதி' படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி 'சுல்தான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் தற்போது தியேட்டர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... சமீபத்தில், விவேக்-மெர்வின் இசையில் அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய 'சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு' பாடல் வெளியானது.

 இதை தொடர்ந்து, சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்காக சிம்பு பாடியுள்ள 'யாரையும் இவ்வளவு அழகா' என துவங்கும் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது சொன்ன நேரத்திற்கு சிம்புவின் குரலில் பாடலை வெளியிட்டிருக்கின்றனர். அதனைக் கேட்ட ரசிகர்களோ பாடல் வேற லெவலுக்கு ஹிட்டடிக்கும் என தெரிவித்துள்ளனர். இதோ...