சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் '2.0' திரைப்படம் இன்னும் நான்கே தினங்களில்   வெளிவரவுள்ள நிலையில், அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் கார்த்தி சுப்புராஜ்  நடிப்பில் நடித்துள்ள , பேட்ட' திரைப்படம்  வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக  தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். 

தற்போது 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் மற்றும் இசை வெளீயீட்டு தேதிகளை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும், அதனையடுத்து செகண்ட் சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் அனைத்து பாடல்களும் வரும் டிசம்பர் 9ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் 'பேட்ட' படம் பொங்கல் ரிலீஸ் என்றா அறிவிப்பை அச்சிட தான் மறந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதா கூறி பதறியபடி டுவிட் பதிவு செய்துள்ளார்.

 

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.