மூத்த நடிகரான சிவக்குமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நாயகனாக திரையுலகில் கலக்கி வருகின்றனர்.

தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காஷ்மோரா நல்ல வசூலை பெற்று வருகின்றது. 

இப்படத்திற்கான மக்களில் வரவேற்பை தெரிந்து கொள்ள பல தியேட்டர்களில் கார்த்தி நேரில் சென்று விசிட் அடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவுடன் நடிப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் அவரை கேட்க, அதற்கு கார்த்தி ‘கண்டிப்பாக நடிப்பேன் என்றும் .

ஆனால், ஒரு கண்டிஷன் அண்ணன் சூர்யா ஹீரோவாக நடிக்க வேண்டும், நான் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும், அப்படியென்றால் கண்டிப்பாக நடிப்பேன்’ என கூறி அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளார்.