நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் அவருடைய சகோதரர் நடிகர் சூர்யா. அவரை தொடர்ந்து தற்போது, அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் கார்த்தி. இந்த படத்தில் கார்த்தியின் அக்காவாக நடிக்கிறார் ஜோதிகா. 

இந்த படத்தை, 'பாபநாசம்' படத்தின் இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது, 'முதல்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது த்ரில்லிங்கான அனுபவமாக உள்ளது. பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் அவர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம். இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

மேலும் படப்பிடிப்பு தொடங்குவதை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளத்தையும் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தின் போஸ்டரின் மலை, காடு நிறைந்த பகுதியில் கார்த்தியின் முகம் தெரிகிறது.