Asianet News TamilAsianet News Tamil

"குழந்தை கருவானது முதல் பிறந்தது வரை" வீடியோவாக பகிர்ந்த கார்த்தி பட நாயகி!

சகுனி ,மாஸ் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த  பிரணீதா பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்நிலையில் அவர் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Karthi heroine Pranitha Subhash who shared the video baby birth
Author
Chennai, First Published Jun 12, 2022, 2:25 PM IST

அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணீதா. இதுதொடர்ந்து கார்த்தி நாயகனாக நடித்த சகுனி, சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  பிரணீதா முன்னணி நடிகர்களுடன் நடித்த போதிலும் போதுமான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால்  பாபி டால் போல இருக்கும் நாயகி பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Karthi heroine Pranitha Subhash who shared the video baby birth

பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர், கடந்தாண்டு மே மாதம் திருமணம் செய்தியை அறிவித்தார்.  தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார். மணமுடித்த பின்னரும் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் பிறந்தநாளன்று  கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

Karthi heroine Pranitha Subhash who shared the video baby birth

இந்த தம்பதிகள் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.. கடந்த 9 -ம் தேதி பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டார். இதையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

Karthi heroine Pranitha Subhash who shared the video baby birth

இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை பிரணீதா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் குழந்தை உருவான முதல் அதன் அசைவுகளை கண்டு ரசித்தது. குழந்தை பிறப்பு என அனைத்து தருணங்களையும் பகிர்ந்துள்ளார் பிரணீதா. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios