karthi compare the rajarajan wife nalini in cow
பிரபல, நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த 'கரகாட்டகாரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்' ஆகிய படங்கள் இன்று வரை பல ரசிகர்களால் ரசித்து பார்க்ககூடிய படங்களாக இருந்து வருகிறது.
இவர் 80 களில் முன்னணி நடிகையாக, இருந்த பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 
இந்நிலையில் அமேசான் ப்ரைமில் 'பிளட் சட்னி' என்ற பெயரில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில், ஸ்டான்ட் அப் காமெடி செய்த நடிகர் கார்த்திக் குமார், நடிகர் ராமராஜன் நிச்சயம் ஒரு பசுமாட்டை வைத்திருந்திருப்பார் என்றும், ஆனால் தாம் அவரது மனைவி நளினியை குறிப்பிடவில்லை என்றும் கூறியிருந்தார். 
இதன்மூலம், நடிகர் கார்த்திக்குமார் பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி ஜெனிபர் ஜேக்கப் என்பவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கும், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், நகைச்சுவை என்ற பெயரில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்றும் ஜெனிபர் ஜேக்கப் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
