கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும் நடிகையுமானகுட்டி ராதிகா தற்போது அகோரியாக மாறியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும் நடிகையுமானகுட்டி ராதிகா தற்போது அகோரியாக மாறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகை குட்டி ராதிகா. சில காலம் திரையுலகின் பக்கம் வராமலே இருந்த இவர்... திடீர் என குழந்தையுடன் வந்து, இந்த குழந்தையின் தந்தை தற்போதைய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி என கூறினார்.

குமாரசாமியும், இவர் கூறியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்... இது தன்னுடைய குழந்தை என்றும் குட்டி ராதிகா தன்னுடைய இரண்டாவது மனைவி என்றும் கூறினார். 

இந்நிலையில் சில காலம் அவருடைய மகள் ஷாமிகாவை பார்த்து கொள்வதற்காக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர்... மகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். 

அந்த வகையில் தற்போது பைராதேவி என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக குட்டி ராதிகா காசியில் ஒரு வாரம் வரை தங்கியிருந்து பெண் அகோரிகளின் நடவடிக்கைகள், மேனரிசங்கள் ஆகியவற்றை கற்றுக் கொண்டு நடித்து வருகிறாராம். இந்த படத்தில் இவரை தவிர ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவிசங்கா, சுசித்ரா பிரசாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீஜெய் இயக்குகிறார்.