நடிகர் சத்யராஜ், சமீபத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக மறுப்பது குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தை பரவலாக அனைவரும் வரவேற்றனர்.  

ஆனால் கர்நாடகாவில் இவருடைய கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது, ஆகவே சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மன்னிப்பு கேட்டால் தான் அவர் நடித்து வெளிவரும் படங்களை திரையிட அனுமதிப்போம் என தொடர்ந்து ஒரு சில கட்சியினர் கோரிக்கை விடுத்தது வந்தனர்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் சத்யராஜ்  நடித்த "பாகுபலி 2" திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய தென்னிந்திய மொழிகளில்  வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும்,  என்னையும் கன்னட மக்களையும் அவமதித்த சத்யராஜை கண்டித்து ஏப்ரல் 28 அன்று எங்கள் அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கும் என கன்னட சலுவாலி இயக்க தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியபோது நாங்கள்  பாகுபலி படத்திற்கு எதிரானவர்கள் அல்ல, சத்யராஜ் கூறிய கருத்து தங்களை அவமதிப்பதாக உள்ளது ஆகவே நாங்கள் அவருக்கு மட்டுமே எதிரானவர்கள் என தெரிவித்துள்ளார்.