Asianet News Tamil

அட்லிக்கு இப்படி ஒரு பாராட்டா...’பிகில்’ படம் பார்த்து மிரண்டு போன பாலிவுட் பிரபலம்...!

பல படங்களின் கதை மற்றும் காட்சிகளை சுட்டு, ’பிகில்’ படத்தை எடுத்துவிட்டார் என இயக்குநர் அட்லியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவர் அட்லியின் இயக்கத்தை ஆஹா...ஓஹோ... என புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 

Karan Johar Prasises Atlee and Vijay For Bigil Movie
Author
Chennai, First Published Oct 30, 2019, 1:18 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அட்லிக்கு இப்படி ஒரு பாராட்டா...’பிகில்’ படம் பார்த்து மிரண்டு போன பாலிவுட் பிரபலம்...!

தீபாவளி டிரீட்டாக கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆன ’பிகில்’ திரைப்படம்  152 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. என்ன தான் ’பிகி’ல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், திரையிட்ட இடமெல்லாம் ஹாட்ரிக் ஹிட் அடித்து வருகிறது. இதற்கு முந்தைய விஜய் படங்களின் வசூல் சாதனைகளைக் கூட ’பிகில்’ திரைப்படம் அதிரடியாக தகர்த்து வருகிறது. ’பிகில்’ படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது, திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 

பல படங்களின் கதை மற்றும் காட்சிகளை சுட்டு, ’பிகில்’ படத்தை எடுத்துவிட்டார் என இயக்குநர் அட்லியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவர் அட்லியின் இயக்கத்தை ஆஹா...ஓஹோ... என புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பாலிவுட் இயக்குநர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் கரண் ஜோஹர். சமீபத்தில் ’பிகில்’ திரைப்படத்தை பார்த்த அவர், அதனை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பண்டிகை கொண்டாட்டத்திற்கான படம் ’பிகில்’, விஜய் நடிப்பு டாப் பார்ஃம் என்று குறிப்பிட்டுள்ளார். அட்லியின் இயக்கத்தை புகழ்ந்து தள்ளியுள்ள கரண் ஜோஹர், அட்லியை சூப்பர் ஸ்டார் இயக்குநர் என பாராட்டியுள்ளார். பல படங்களின் காப்பி பேஸ்ட் தான் ’பிகில்’ என நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், கரண் ஜோஹரின் இந்த பாராட்டு விஜய் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios